'மொபைல் போன்'களில் மூழ்கும் குழந்தைகளுக்கு ஆபத்து!

புதுடில்லி: நம் நாட்டில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 'மொபைல் போன்'களை நாள்தோறும் 2 மணிநேரம் பார்ப்பது நிபுணர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, பரிந்துரைக்கப்பட்ட நேரத்தைவிட இரு மடங்கு அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின், ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 'மொபைல் போன், டேப்லேட், லேப் டாப்' போன்றவற்றை நாள்தோறும் எத்தனை முறை பயன்படுத்துகின்றனர்? இதற்காக எவ்வளவு மணி நேரம் செலவிடுகின்றனர்? என சமீபத்தில் ஆய்வு செய்தனர்.
நாடு முழுதும், 2,857 குழந்தைகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒவ்வொரு குழந்தையும் நாள்தோறும், 2.22 மணி நேரம் மொபைல் போன் திரைகளை பார்ப்பது தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களால், நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பான வரம்பைவிட இது இரு மடங்கு அதிகம்.
அதேபோல், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பார்க்கும் நேரத்தை பூஜ்ஜியமாக நிபுணர்கள் நிர்ணயித்துள்ள சூழலில், அது தினமும் 1.23 மணி நேரமாக இருப்பது கவலையை அதிகரித்துள்ளது.
இது போல், தொடர்ந்து மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களை பார்ப்பதால் குழந்தைகளின் மொழித்திறன், அறிவாற்றல், சமூக நடத்தை போன்றவை பாதிக்கப்படுகிறது.
அதிக உடல் பருமன் ஆபத்து, துாக்கமின்மை, கவனம் செலுத்தவதில் சிரமம் போன்ற தொந்தரவுகள் குழந்தைகளுக்கு ஏற்படுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலான வீடுகளில், குழந்தைகளை உணவு உண்ண செய்வதற்காக மொபைல் போன்களை கொடுத்து பெற்றோர் பழக்கப்படுத்துகின்றனர்.
அதேபோல், தொந்தரவு செய்யாமல் இருக்கவும், இந்த பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால், நன்மையைவிட, அதிக அளவு தீங்கு விளைவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
@block_B@
குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதை தவிர்க்க, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எய்ம்ஸ் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதில் கூறப்படுவதாவது:வீட்டில், குறிப்பாக படுக்கையறைகள், உணவு மேஜைகளில் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத பழக்கத்தை உருவாக்குங்கள். குழந்தையின் வயதை அடிப்படையாக வைத்து, அவர்கள் மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும், உங்கள் குழந்தையுடன் சுறுசுறுப்பாக விளையாடுவதற்கும், பேசுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள். சாப்பிடும் போது, மொபைல் போன் பயன்படுத்துவதை பெற்றோர்களே தவிருங்கள். குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்று சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்குவியுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது-. block_B

மேலும்
-
முழுமையான பா.ஜ.,வாகவே மாறிவிட்டார் பழனிசாமி; சண்முகம்
-
சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்: மத போதகர் உட்பட மூவர் கைது
-
85 வயதிலும் சும்மா இருக்க மனமில்லை லட்சுமியம்மாவுக்கு!
-
'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து
-
இது உங்கள் இடம்