செஞ்சி கோட்டையில் சுற்றுலா கட்டமைப்பு

மராட்டியர்களுக்கு முன்பே பல்லவர்கள், சோழர்கள், காடவராயர்கள் உள்ளிட்ட, பல தமிழ் மன்னர்கள் செஞ்சி பகுதியை ஆண்டுள்ளனர். மராட்டியர்களுக்கு பின் முகலாயர்கள், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் செஞ்சி கோட்டையை பிடித்தனர்.

தஞ்சை பெரிய கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் நினைவு சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகியவற்றை தொடர்ந்து, செஞ்சி கோட்டையையும் யுனெஸ்கோ அங்கீகரித்த உலக பாரம்பரிய சின்னமாக மாறி உள்ளது.

எனவே, அப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

--- அன்புமணி,

தலைவர், பா.ம.க.,

Advertisement