அலங்காநல்லுார் அலுவலகம் முற்றுகை

அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் வசதி கேட்டு பெண்கள் முற்றுகையிட்டனர்.

பேரூராட்சிக்குட்பட்ட 3,5,7,9, 10வது வார்டு பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, சில இடங்களில் தண்ணீர் அளவு குறைவாக வருகிறது என தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். நேற்று காலை இப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

'குடிநீர் பிரச்னையை தீர்க்க வாடிவாசல் பின்பகுதியில் 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவில் தொட்டி கட்டும் பணிக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் தாமதமான பணி தற்போது விரைவாக நடக்கிறது.

அதுவரை மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்' என பேரூராட்சி தலைவி ரேணுகா ஈஸ்வரி, அலுவலர்கள் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement