சதம் விளாசினார் ராகுல்; இந்திய அணி அபார ஆட்டம்

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய ராகுல் சதம் விளாசினார். ரிஷாப் அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன் - சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 387 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 145/3 ரன் எடுத்து, 242 ரன் பின் தங்கி இருந்தது. ராகுல் (53), ரிஷாப் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரிஷாப் அரைசதம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை, இந்திய வீரர் புஜாரா, மணி அடித்து துவக்கி வைத்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய ரிஷாப், 4வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஸ்டோக்ஸ் பந்தில் சிக்சர் அடித்த ரிஷாப், அரைசதம் கடந்தார்.
'ரன் அவுட்' தேவையா
கார்ஸ் வீசிய போட்டியின் 54 வது ஓவரின் கடைசி 3 பந்தில், 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார் ராகுல். மறுபக்கம் ரிஷாப் கைவிரலில் வலி அதிகரிக்க, சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங்கை தொடர்ந்தார்.
4வது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்த நிலையில் ரிஷாப் (74) தேவையற்ற முறையில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட, ஸ்டோக்சின் துல்லிய 'த்ரோவில்' ரன் அவுட்டானார்.
நிதான ஆட்டம்
உணவு இடைவேளைக்குப் பின் ஆர்ச்சர் பந்தில் ஒரு ரன் எடுத்த ராகுல், சதம் எட்டினார். இவர் 100 ரன்னில், சோயப் பந்தில் அவுட்டானார். தேநீர் இடைவேளைக்கு பின் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326/5 ரன் எடுத்து, 61 ரன் பின் தங்கி இருந்தது. பொறுப்பாக பேட் செய்த ஜடேஜா (44), நிதிஷ் குமார் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
-
நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ
-
புது கட்சி துவக்குகிறார் அன்புமணி?