விழிப்புணர்வு ஊர்வலம்

உசிலம்பட்டி: நக்கலப்பட்டியில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித நேயம் காத்திடுவோம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திட்ட இயக்குநர் லுாசியா, ஊராட்சி செயலாளர்கள் ஜெயராமன், அலெக்ஸ்பாண்டியன், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர். பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணத்தை தடுப்பது, மனித நேயம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement