ஆடிப் பண்டிகைக்காக ஆடுகளுக்கு கிராக்கி

பேரையூர்: ஆடிப் பண்டிகையில் அசைவ உணவாக ஆட்டுக்கறி இடம் பிடிக்கும் என்பதால் ஆடு விற்பனை சூடு பிடித்துள்ளது.

பேரையூர் தாலுகாவில் விவசாயத்துடன் ஆடு வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இத்தாலுகாவில் அதிக வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாரமும் டி.கல்லுப்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். பண்டிகை காலங்களில் வெளியூர் வியாபாரிகளும் அதிகம் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வர்.

ஆடி பண்டிகை அசைவ உணவாக ஆட்டுக்கறி முக்கிய இடம் பிடிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஆடித் துவக்கத்திலும் இறுதியிலும் அசைவ உணவு இடம்பெறும்.

இதனால் ஆடுகளுக்கு தேவை அதிகமாகும். இதனால் வியாபாரிகள் விவசாயிகளின் வீட்டுக்கே சென்று ஆடுகளை விலை பேசி வாங்கி செல்கின்றனர். இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Advertisement