வாடிப்பட்டிக்கு புதிய ஸ்கேன்

வாடிப்பட்டி:வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி வழங்கும் விழா நடந்தது. ஏற்கனவே இங்கு 10 ஆண்டுகளாக ஸ்கேன் பார்க்கப்படுகிறது.

சுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குனர் செல்வராஜ் புதிய ஸ்கேனை துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் சாந்தி, உதவி டாக்டர்கள் தனசேகரன், பாலாஜி, நிர்மலன், வேல்முருகன், ராமகிருஷ்ணன், சிவக்குமார் முத்துலட்சுமி, சுகந்தி, சித்த மருத்துவர் கவிதா, மருந்தாளுனர்கள் பங்கேற்றனர். தலைமை நர்ஸ் கவிதா நன்றி கூறினார்.

Advertisement