நாளை திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகம் 'பார்க்கிங்' இடங்கள் அறிவிப்பு போக்குவரத்து மாற்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 14) நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கனரக வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள்
n கப்பலுாரிலிருந்து திருநகர் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் கூத்தியார்குண்டு மேம்பாலம், பைபாஸ் ரோடு வழியாக செல்லவேண்டும்.
n காளவாசல் பைபாஸ் ரோடு வழியாக திருப்பரங்குன்றம் ரோட்டில் செல்லக்கூடிய வாகனங்கள் காளவாசல் சந்திப்பிலிருந்து தேனி ரோடு, நாகமலைபுதுக்கோட்டை பைபாஸ் ரோடு சென்று செல்லவேண்டும்.
n அவனியாபுரம் வழியாக வரும் வாகனங்கள் அவனியாபுரம், முத்துப்பட்டி - திருப்பரங்குன்றம் ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்லவேண்டும்.
பொது போக்குவரத்து வழித்தடங்கள்
n திருநகரிலிருந்து திருப்பரங்குன்றம் வழியாக மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கிரிவலப்பாதை, திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு பதில் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்லவேண்டும்.
n மதுரை நகரிலிருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்லும் அனைத்து வாகனங்களும் மூட்டா தோட்டத்திலிருந்து திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு வழியாக செல்லவேண்டும்.
n அவனியாபுரம் ரோட்டில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக திருநகர் செல்லும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் ரோடு முத்துப்பட்டி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி முத்துப்பட்டி, அழகப்பன்நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.
கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள்
n திருப்பரங்குன்றம் ஆர்ச்சிலிருந்து 16 கால் மண்டபம், திருப்பரங்குன்றம் சன்னதி தெரு வரை, துணைகமிஷனர் அலுவலகத்திலிருந்து லாலா கடை வரை மற்றும் நான்கு ரத வீதிகளிலும் எந்த ஒரு வாகனமும் நிறுத்த அனுமதி கிடையாது.
n மதுரை நகரிலிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மூட்டா காலனி சந்திப்பு திருப்பரங்குன்றம் சப்வே வழியாக சென்று செங்குன்றம் சாலை வழியாக கே.வி. பள்ளி சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி அவனியாபுரம் ரோடு சந்திப்பில் உள்ள திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள அறநிலையத்துறை வாகன நிறுத்தம், காசி விஸ்வநாதர் கோயில் அருகிலுள்ள வாகன நிறுத்தம், பசுமடம், செவந்திபுரம் கண்மாய் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
n பக்தர்களின் வேன், பஸ்கள் திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தென்கரை கண்மாய் ரோட்டிலும், மூட்டா தோட்டம் அருகிலுள்ள மன்னர் கல்லுாரி பின்புறமும் தற்காலிக 'பார்க்கிங்' இடத்திலும் நிறுத்த வேண்டும்.
n திருநகரிலிருந்து வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் ஹார்விபட்டி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி நிலையூர் சந்திப்பு மற்றும் கிரிவல பாதை வழியாக சென்று கருவாட்டுபாறை, ரயில்வே கேட் அருகிலுள்ள நிலையூர் சந்திப்பில் உள்ள 'பார்க்கிங்'கில் நிறுத்த வேண்டும்.
n அவனியாபுரம் ரோடு வழியாக வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் ரோடு சந்திப்பு அருகே உள்ள மாணிக்கம் ராமசாமி கல்லுாரி மைதானம், மாருதி கார் ஷோரூம் அருகிலுள்ள மைதானத்தில் நிறுத்த வேண்டும்.
n அரசுத்துறை வாகனங்கள் அருணகிரி திருமண மண்டபத்தில் நிறுத்த வேண்டும்.
n பக்தர்கள் தங்கள் டூவீலர்களை திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகிலுள்ள மேம்பாலத்திற்கு கீழ் பகுதியிலும், திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் ரோடு சந்திப்பிற்கு எதிரே உள்ள காலி இடத்திலும் நிறுத்த வேண்டும்.
மேலும்
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு