பூதகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி யாக சாலை பூஜை

வானுார்: கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு சுயம்பு பூதகாளியம்மன் கோவில் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகா யாக சாலை பூஜை நடந்தது.

பூஜையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா செய்திருந்தனர்.

பூஜையில் கிளியனுார் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், முன்னாள் துணைத் தலைவர் புருஷோத்தமன், அய்யப்பன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், ஞானக்கல்மேடு ராஜகுரு பாண்டியன், ரவி, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement