பாசம் காட்டாத தாய் புலி பரிதவித்து இறந்த 3 குட்டிகள்

பெங்களூரு: பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் ஹிமதாஸ் என்ற பெண் புலி உள்ளது. இந்த புலி, கடந்த 7ம் தேதி மூன்று குட்டிகளை ஈன்றது. கடந்த சில நாட்களாகவே, தாய் புலி குட்டிகளை சரியாக பராமரிக்காமல் வந்தது. குட்டிகளின் உடல் நிலை மோசமானது.

இதனால், குட்டிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவம் அளித்தனர். இருப்பினும், கடந்த 8ம் தேதி ஒரு ஆண் குட்டியும், 9ம் தேதி ஆண், பெண் என இரு குட்டிகளும் இறந்தன. இறந்த குட்டிகளின் உடலை, கால்நடை மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்தது.

பரிசோதனை முடிவுகளில், தாய் புலி மிதித்ததில் குட்டிகளின் உடலில் காயங்கள் ஏற்பட்டதும், தாய்ப்பால் ஒழுங்காக அளிக்காததாலும் குட்டிகள் இறந்தது தெரிய வந்துள்ளது.

இதை நேற்று உறுதிப்படுத்திய பன்னரகட்டா உயிரியல் பூங்கா அதிகாரிகள், மற்ற உயிரினங்களை விட, தன் குட்டிகளை வளர்ப் பதில் புலிகள் ஆர்வம் காட்டுவது குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement