மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டும்; கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

24


சென்னை: ''தி.மு.க., மீதான மக்களின் எதிர்பார்ப்பை காப்பாற்ற கடினமாக உழைக்க வேண்டும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில் நடந்த, 'உடன் பிறப்பே வா' கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் ஆதரவு பெருக, பெருக பொறுப்பும் கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றியை ஈட்ட அயராது உழைக்க வேண்டும். தி.மு.க., இடையூறுகள், அவதூறுகள் எதுவாயினும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது.

தி.மு.க., நிர்வாகிகள் மக்களை சந்திக்கும்போது பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும். எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.



தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கு, தமிழகத்தில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுக்கப்படுகிறது. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் தி.மு.க.,வில் புதிதாக 77 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement