தனியார் பள்ளியில் திருட்டு; ஒருவர் கைது

பெ.நா.பாளையம் : சின்னமத்தம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த திருட்டு தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியநாயக்கன்பாளையம், சின்னமத்தம்பாளையம் அருகே சாய் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த மாதம், 20ம் தேதி நடந்த திருட்டில், 7 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாரிமுத்து, 35, நபரை போலீசார் கைது செய்தனர். இத்திருட்டு தொடர்பாக, மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement