ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு  1 கோடி ரூபாய் நிதியுதவி

கோவை : துடியலுார், வட்டமலைப்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் 2000ல் பட்டம் பெற்ற மாணவர்களின், 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.

இந்தியா மட்டுமின்றி அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து, 125க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

விழாவில், முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், தொழில் முனைவோராகவும் சுமார் ஒரு கோடி ருபாய் நிதி அளித்தனர். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, மாணவர்களுக்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலை வழங்கினர்.

எஸ். என். ஆர்., சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் கல்லுாரியின் தலைமை நிர்வாக அதிகாரி, ராம்குமார், முதல்வர் சவுந்தர்ராஜன், மாணவ சங்கத் தலைவர் வீணா ரமேஷ் நிகழ்வில் பங்கேற்றனர்.

Advertisement