'பகவானை பாடி மகிழவே பாசுரங்கள் தோன்றின'

1

கோவை : கோவை பாரதீய வித்யாபவன் சார்பில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி பாரதீய வித்யா பவன் அரங்கில் நேற்று நடந்தது.

இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசியதாவது:

வேதங்களும், இதிகாசங்களும் இருக்கும் போது, தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஏன் பாடப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இவை புதிதாக பாடப்படவில்லை. வேதகாலத்தில் இருந்து இந்த தமிழ் பாசுரங்களும் உள்ளன. பாசுரங்கள் தமிழில் ஏன் பாடப்பட்டது என்றால், வேதத்தில் இருப்பதை தமிழாக்கி கொடுப்பதற்காக பாடப்பட்டது. இந்த பாசுரங்கள் எல்லாம் சமஸ்கிருத மொழியில் இருப்பதால், பக்தர்கள் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் என்பதற்காக பாடப்பட்டது.

உபநிஷத்தின் அர்த்தங்களை, நம்மாழ்வார் தமிழில் கொடுத்தார். மற்ற ஆழ்வார்களும் கொடுத்தனர். ஆழ்வார்கள் பகவான் வழியாக அவர்கள் அனுபவித்ததை பாசுரமாக பாடினர். பகவானை பாடத்தான் பாசுரங்கள் தோன்றின. இதில் ஒவ்வொரு ஆழ்வார்களுக்கும் ஒரு நோக்கம் இருக்கும். அதில் பக்தர்களுக்கான நலனும் இருக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement