கோப்பை வென்றது இந்தியா * கடைசி போட்டியில் ஏமாற்றம்

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து சென்ற இந்திய பெண்கள் அணி 5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் 4 போட்டி முடிவில் இந்தியா 3-1 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. ஐந்தாவது, கடைசி போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.
ஷபாலி அரைசதம்
இந்திய அணிக்கு ஸ்மிருதி (8), ஷபாலி ஜோடி துவக்கம் தந்தது. ஜெமிமா (1), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (15), ஹர்லீன் (4) ஏமாற்றினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுபக்கம் பவுண்டரிகளாக விளாசினார் ஷபாலி. இவர் 23 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய ஷபாலி, 41 பந்தில் 75 ரன் எடுத்து அவுட்டானார். ரிச்சா 24 ரன் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 167/7 ரன் எடுத்தது.
தீப்தி ஆறுதல்
இங்கிலாந்து அணிக்கு சோபியா (46), டேனி (56) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 101 ரன் சேர்த்தது. மையா (16) நிலைக்கவில்லை. கேப்டன் டாமி 20 பந்தில் 30 ரன் எடுக்க வெற்றி எளிதானது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 168/5 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி 3-2 என தொடரை வசப்படுத்தி, கோப்பை வென்றது.
மேலும்
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
-
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்