வேகவதி ஆற்று கால்வாய் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:கீழ்கதிர்பூர் வழியாக, வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர், கீழ்கதிர்பூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் பெய்யும் மழைநீர், குண்டுகுளம் வழியாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாய் செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளதால், மழை பெய்யும் போது, கால்வாய் மூலமாக வேகவதி ஆற்றுக்கு செல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து, நெல் நாற்று நடவு செய்துள்ள பகுதி மழைநீரால் மூழ்கி விடுகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது.
எனவே, குண்டுகுளம் வழியாக வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
-
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்