விம்பிள்டன் டென்னிஸ்: 'நம்பர் 1' வீரர் சின்னர் சாம்பியன்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்திய, இத்தாலியின் 'நம்பர் 1' வீரர் சின்னர், சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர் (23), 'நம்பர்-2' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (22), மோதினர்.
இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் வென்றார். ஆனால் அடுத்தடுத்த செட்களில் சின்னரிடம் திணறிய அல்காரஸ், மீண்டு வர முடியாமல் திணறினார். 2வது செட்டை 6-4 என வென்ற சின்னர், 3 மற்றும் 4வது செட்களையும் 6-4 என வென்றார். முடிவில், 3 - 1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம், பிரெஞ்ச் ஓபன் பைனலில் (2024) அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் சின்னர் பதிலடி கொடுத்தார். மேலும், விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் அல்காரஸ் கனவும் தகர்ந்தது.

மேலும்
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
-
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்