5.37 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க முடிவு

சென்னை: நடப்பாண்டு பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5.37 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டு தோறும் இலவச சைக்கிள் கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு பிளஸ் 1 படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 193.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க, அத்துறை சார்பில், நடப்பாண்டு 80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்நிதியில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்கள் வாங்க, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளது.
சைக்கிளில், 'தமிழ்நாடு முதலமைச்சரின் மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2025 - 26' என்ற லோகோ இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
@block_B@
வகுப்பு மாணவர்கள் மாணவியர் மொத்தம்பிற்படுத்தப்பட்டோர் 83,581 1,08,207 1,91,788மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 81,952 1,00,311 1,82,263ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 68,687 87,780 1,56,467இதர பிரிவினர் 2,652 3,575 6,267மொத்தம் 2,32,872 2,99,873 5,36,745block_B