உள்ளூர் முருங்கை வரத்தால் விலை சரிவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் முருங்கை மரங்கள் பரவலாக உள்ளன. அதன் சீசன் இல்லா-ததால், காய்க்கு தட்டுப்பாடு இருந்தது. வெளி-யூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்-டதால், ஒரு முருங்கைக்காய், 10 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது.


இதுகுறித்து, பனமரத்துப்பட்டியை சேர்ந்த தாத-காப்பட்டி உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறுகையில், ''கடந்த மாதம் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த முருங்கை கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விலையில் ஒரு காய், 10 ரூபாய்க்கு விற்றது. தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ளூர் முருங்கை விற்பனைக்கு வரத்தொடங்கியதால், கிலோ, 50 ரூபாயாக விலை சரிந்துள்ளது. மேலும் வரத்து அதிகரித்தால், மேலும் விலை சரியும்,'' என்றார்.

Advertisement