ரூ.20 லட்சம் நகைகளை திருடிய ஆட்டோ டிரைவர் பிடிபட்டார்
புதுடில்லி:ஆட்டோவில் பயணம் செய்த தம்பதியின், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி, சாராய் காலேகான் பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஜூன் 27ம் தேதி வாசிம் என்பவரின் ஆட்டோவில் ஒரு தம்பதி மற்றும் சிலர் பயணம் செய்தனர். ஆட்டோவை பாதி வழியில் நிறுத்திய வாசிம், வேறு ஒரு ஆட்டோவில் தம்பதியை மட்டும் ஏற்றி அனுப்பி வைத்தார்.
அதன்பின், தங்கள் பையில் இருந்த தங்க நகைகள் மாயமானதை அறிந்த தம்பதி, போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், 10ம் தேதி வாசிமை கைது செய்தனர். தம்பதியிடம் இருந்து ஆட்டோவில் சக பயணி போல வந்த நண்பர்கள் வாயிலாக தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
வாசிம் வீட்டிலிருந்து, 11,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஷ்மீரி கேட், கீதா காலனி, கோட்வாலி, ஹஸ்ரத் நிஜாமுதீன், திமர்பூர், சீலாம்பூர் ஆகிய ஸ்டேஷன்களில் வாசிம் மீது, எட்டு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும்
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
-
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்