உயிர் பலி தடுப்பு பிரசாரம்

செஞ்சி : செஞ்சியில் சன்மார்க்க சங்கம் சார்பில் உயிர் பலி தடுப்பு பிரசாரம் நடந்தது.

மேல்மலையனுார் வட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் நடந்த பிரசாரத்திற்கு, சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி, அண்ணாமலை, ரவிச்சந்திரன், புருஷோத்தமன், ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

செஞ்சி நகர சங்க நிர்வாகி தணிகாசலம் தெய்வத்தின் பெயரில் உயிர் பலி கொடுப்பதை நிறுத்த வேண்டும். கோவில்களில் உயிர் பலி செய்யக்கூடாது என வள்ளலார் கூறிய கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார்.

சிங்கவரம் சாலை குளக்கரை அருகே இருந்து துவங்கிய ஊர்வலம் முக்கிசய சாலைகள் வழியாக சென்றது.

செஞ்சி மேல்மலையனுார் தாலுகாக்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement