சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கான சிறப்பு முகாமில் 29 மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. குடிமைபொருள் தனி தாசில்தார் சரவணன் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், மொபைல் எண் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 29 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Advertisement