கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நின்ற தண்ணீர் வரத்து
கரூர்: அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்-டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து நின்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து, கடந்த ஜூன் மாதம், முதல் முறை வைத்து ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கேரளா மாநிலம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால், அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 432 கன அடியாக உள்-ளது.
இதனால், அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கும், தண்ணீர் வரத்து நின்றதால், தடுப்பணை பகுதியில், பாறைகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அம-ராவதி அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 88.03 அடியாக இருந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 154 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.மாயனுார் கதவணை
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 27,849 கன அடியாக இருந்-தது. அதில், 26,379 கன அடி தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், திறக்-கப்பட்டுள்ளது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.80 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்-ளது.
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு