ப.வேலுார் வாரச்சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு,,
ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டை, மோகனுார் பிரிவு சாலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்-கோழி சந்தை கூடுகிறது.
இங்கு, பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்டமங்கலம், பொத்-தனுார், ப.வேலுார் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளை, வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம், கோழிகள் வரத்து அதி-கரித்ததால், அதன் விலை சரிந்தது. கடந்த வாரம், ஒரு கிலோ நாட்டுக்கோழி, 650 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒருசில வியாபாரிகள், பண்ணை கோழிகளை நாட்டுக்-கோழி என ஏமாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததாக, விவசாயிகள் தெரிவித்-தனர்.
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு