வனக்காவலரை தாக்கிய யானை பின்னங்காலை பிடித்து தப்பினார்

தேன்கனிக்கோட்டை : கெலமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை ஒற்றை யானை தாக்கியதில், அதன் பின்னங்காலை பிடித்து உயிர் தப்பினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஹள்ளி அருகே முருங்கம்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன், 29; தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், நான்கு ஆண்டுகளாக வேட்டை தடுப்பு காவலராக தற்காலிக பணியில் உள்ளார்.
நேற்று காலை, 6:30 மணிக்கு, ராயக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடிக்கல் கிராமம் அருகே தடுப்பணை பகுதியில் சுற்றித்திரிந்தது.
அதை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில், வன காவலர் ராம்குமார் தலைமையில், 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, யானை, வேடிக்கை பார்க்க வந்த ஒருவரை தாக்க ஓடியது. அவரை காப்பாற்றுவதற்காக கீழே நின்றிருந்த வேட்டை தடுப்பு காவலர் நீலகண்டன், பட்டாசு வெடித்து, சத்தம் போட்டு யானையை விரட்டினார்.
இதில், ஆக்ரோஷமான யானை நீலகண்டனை துரத்தி, தாக்கியதில், வலது கால் மற்றும் இடது கால் தொடையில் படுகாயமடைந்தவர், யானையின் பின்னங்காலை இறுக பிடித்துக் கொண்டார். யானை மற்றொரு பின்னங்காலால் அவரை உதைக்க முயன்றதில், முடியாமல் போகவே, யானை மேற்கொண்டு தாக்காமல் அங்கிருந்து சென்றது.
இதையடுத்து, வனத்துறையினர் நீலகண்டனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும்
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்