பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்

22

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திறந்து 3 மாதங்களே ஆன பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுராந்தகத்தை அடுத்த புதுப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில், 6ம் வகுப்பு படித்து வரும் கோபிகா, தேன்மொழி, வைசாலி,கோகுல், ரஷித், ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


விபத்து நடந்த பள்ளிக் கட்டடம் திறந்து 3 மாதங்களே ஆகின்றன. ரூ.33 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டடம், கடந்த ஏப்ரல் மாதம் தான் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளியின் தரம் குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கேள்வி எழுந்துள்ளது.


புதிய கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக போலீசாரும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement