நகை பட்டறை தொழிலாளியை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை
போத்தனூர்; கோவை, எட்டிமடை பாலத்தில் நகை பட்டறை தொழிலாளியை தாக்கி, 30 லட்சம் ரூபாயை பறித்து காரில் தப்பிய நான்கு பேர் கும்பலை, போலீசார் தேடுகின்றனர்.
கேரள மாநிலம், திருச்சூர், வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயன், 50; இவர் கோவை, ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில் நகை பாலீஷ் கடை நடத்தி வந்தார். அப்போது நானா சோ ஜாதவ் என்பவரிடம் நகை வாங்க சென்று பழக்கம் ஏற்பட்டது. தொழில் நஷ்டத்தால் கடையை கடந்தாண்டு மூடிவிட்டார். தற்போது கேரள மாநிலம், நெல்லாங்கராவில் உள்ள சதீஷ் என்பவரின் நகை பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம், நானா சோ ஜாதவ், ரூ. 30 லட்சம் கொடுத்து, கேரளாவில் இருந்து ஏல நகை வாங்கி வர கூறியுள்ளார்.
ஜெயன் தனது சட்டையினுள், ரூ.20 லட்சம் மற்றும் பைக்கில் ரூ.10 லட்சம் வைத்துக் கொண்டு, கோவை -- பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் காலை சென்றார்.
எட்டிமடை மேம்பாலத்தில் செல்லும்போது, கார் ஒன்று இவரது பைக்கை உரசுவது போல் வந்து மறித்து நின்றது. நிலை தடுமாறிய ஜெயன் கீழே விழுந்துள்ளார். காரிலிருந்த மூவர், ஜெயனை காரினுள் இழுத்து போட்டனர்.
காரினுள் இருந்த மேலும் ஒருவர் உள்பட, நான்கு பேரும் ஜெயனின் சட்டையை கிழித்து, 20 லட்சம் ரூபாயை பறித்தனர். பைக்கிலிருந்த, 10 லட்சம் ரூபாயையும் எடுத்துக் கொண்ட மர்ம நபர்கள், ஜெயனை சிறிது தூரம் காரில் கடத்திச் சென்று, வேலந்தாவளம் செல்லும் சாலை அருகே, தள்ளி விட்டு, ரொக்கத்துடன் தப்பினர்.
ஜெயன் அவ்வழியே பைக்கில் வந்தவரிடம் லிப்ட் கேட்டு, போலீஸ் ஸ்டேஷன் சென்றார். அப்போது பாலத்தின் கீழ் தனது பைக் நிற்பதை கண்டு, அதனை எடுத்துக்கொண்டு க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷனில், புகார் மனு கொடுத்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தப்பிய நான்கு பேர் கும்பலை தேடுகின்றனர்.
மேலும்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்