பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு

8


சென்னை: தமிழகத்தில் இரு வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பாரோ? என்று பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


அவரது அறிக்கை; பள்ளிக் கல்வித்துறையின் தினசரி சாதனைகள் வரிசையில் இன்று, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் மது பாட்டிலால் ஆசிரியரைத் தாக்கி மண்டையை உடைத்திருக்கிறார்கள். மற்றொருபுறம், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.


பள்ளிக் கல்வித் துறையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்க, உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ப வடிவில் இருக்கைகள் வைப்போம் என, பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கிக் கொண்டிருக்கிறார். சினிமா மோகத்தை விட்டுவிட்டு, எப்போதுதான் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பீர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களே?, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement