உயர்தர ஆய்வகம் பணிகள் தீவிரம்

திருப்பூர்; அரசு நடுநிலைப்பள்ளிகளில், உயர்தர ஆய்வகங்களில் முழுமையாக தயார்படுத்தும் பணிகள் தீவிரமாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. மேலும் நடுநிலைப்பள்ளிகளில், ஆய்வக பணிகள் மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைப்பதற்கு, கடந்த 2023-24ம் கல்வியாண்டின் இறுதியில் பணிகள் துவக்கப்பட்டது. பள்ளிகளில் ஆய்வகத்துக்கென தனி அறை ஒதுக்குவது, வண்ணச்சித்திரங்கள் வரைவது, அதற்கான இருக்கை மற்றும் மேஜை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும், தற்போது வரை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் மின் இணைப்பு வசதிகளும் மும்முனையாக மாற்றப்பட்டு வருகிறது. ஜூலை 15ம் தேதிக்குள், உயர்தர ஆய்வகங்கள் தயார்நிலையில் இருப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில், அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆய்வகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் மென்பொருள் பதிவிறக்கம் மற்றும் செயல்பாட்டுக்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement