கதர் வாரிய ஊழல் குறித்த புத்தகம் வெளியிட்டார் முன்னாள் ஊழியர்

திருப்பூர்; கதர் வாரியத்தில் உதவியாளராக இருந்து, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர், 28 ஆண்டு காலமாக தனது வேலைக்காக போராட்டம் நடத்தி வருகிறார். கதர் வாரியத்தில் நடக்கும் ஊழல்களை புத்தகமாக அச்சிட்டு முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் கணேசன், 60. கடந்த 1984ல் விருதுநகரில் காதி அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். மதுரை, தாராபுரம் ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது பணிக்காலத்தில், துறை அமைச்சர் வீட்டு திருமணத்துக்கு மொய் வசூலிக்குமாறு மதுரை கதர் வாரிய உதவி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை கசிந்தது.
இதை கணேசன்தான் கசிய விட்டார் என்று காரணம் காட்டி, தர்மபுரிக்கு மாற்றப்பட்டார்.இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மீண்டும் மதுரையில் பணிக்குச் சேர்ந்தார். அதன் பின் உயர் அதிகாரிகள் அவரை பழிவாங்கும் நோக்கில் சஸ்பெண்ட் செய்தனர்.இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதில் தாராபுரத்தில் பணியாற்றிய போது, தவறு செய்ததாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், முதல்வர் அலுவலகத்துக்கு அவர் மீது புகார்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் அவரது சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை.
இதுகுறித்து எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி., அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் முறையிட்டு, அவர்கள் பரிந்துரைத்தும் மீண்டும் பணி வழங்கப்படவில்லை.சஸ்பெண்ட் காலத்தில் வழங்க வேண்டிய பிழைப்பூதியமும் வழங்கப்படாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.அவ்வகையில் ஏறத்தாழ 28 ஆண்டுகளாக கணேசன் கடுமையான போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் இல்லாத நிலை உள்ளது.
தனக்கு நேர்ந்த பிரச்னைகள், கதர் வாரியத்தில் தற்போது அதிகாரிகள் செய்து வரும் ஊழல்கள், துறைக்கு ஏற்பட்டு வரும் இழப்புகள் ஆகியன குறித்து தன்னிடமுள்ள ஆவணங்களை தொகுத்து ஒரு புத்தகமாக அச்சிட்டுள்ளார்.
இதை தமிழக முதல்வர், தலைமை செயலர், துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
மேலும்
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
-
தேர்தல் பயத்தால் ஊர் ஊராக செல்லும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
முடிந்தால் என்னையும் சிறையில் அடையுங்கள்; மம்தா பானர்ஜி ஆவேசம்