பா.ம.க., பொதுக்குழு கூட்டம்


ப.வேலுார்: பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ப.வேலுார் தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைந்த அமைப்பு செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞர் சங்க செயலாளர் வடிவேலன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்நாத், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் கலந்து கொண்டார்.

கூட்டத்தில், நாமக்கல், கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் அதிகளவில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். வரும், 20ல் விழுப்புரத்தில் நடைபெற உள்ள வன்னியருக்கு இட ஒதுக்கீடு போராட்டத்தில், நாமக்கல் மாவட்ட பா.ம.க., சார்பில் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement