குவியும் குப்பையால் மாணவர்கள் அவதி


ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர் கேட் அமைந்துள்ளது. குருக்கபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஆண்டகளூர் கேட் முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு அரசு கலைக்கல்லுாரி, கால்நடை மருந்தகம், மாணவ, மாணவிகளின் விடுதிகள் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி ஈரோடு, கோவை, நாமக்கல், மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் இவ்வழியாக பஸ்கள் செல்கின்றன. இதனால், எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

ஆண்டகலுார் கேட்டில் ஓட்டல், டீக்கடைகள் அதிகம் உள்ளன. இதில் இருந்து வரும் குப்பைகளை ஊராட்சி துப்புரவு ஊழியர்கள் தினந்தோறும் காலை நேரடியாக வந்து குப்பைகளை வாங்கி சென்று விடுகின்றனர். அதன் பிறகு சேகரிக்கப்படும் குப்பைகளை ஆண்டகலுார் கேட் பஸ் ஸ்டாப் அருகே கொட்டி விடுகின்றனர். மலைபோல் குவிக்கப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இரண்டு தினங்களுக்கு ஒருமுறை சாலையோர குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement