42ம் ஆண்டு விழா அன்னதானம் வழங்கல்

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலின், ஸ்ரீஆஞ்சநேயர் பஜனைக்குழுவின், 42ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை மூலவர் அழ-கிரிநாதர், சுந்தரவல்லி தாயார், சிங்கமுக ஆஞ்ச-நேயர் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சா-மிர்தம் உள்பட, 16 வகை பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.



தொடர்ந்து நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், கச்சேரி நடந்தன. பின் மூலவர் அழகிரிநாதர், சுந்-தரவல்லி தாயாருக்கு, தங்க கவசம் அணிவித்து, சிங்கமுக ஆஞ்சநேயருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்ன-தனம் வழங்கப்பட்டது.

Advertisement