சுமூகமான உறவு; சீனாவுக்கு ஜெய்சங்கர் அழைப்பு

பெய்ஜிங்: இருநாடுகளுக்கு இடையேயான சுமூகமான உறவை நீட்டிக்கும் விதமாக, பேச்சுவார்த்தைக்கு வருமாறு சீனாவுக்கு வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தியான்ஜின் நகரில் அந்நாட்டின் சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில்; இன்று பெய்ஜிங் வந்த உடன் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் தலைமைத்துவத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இந்த சந்திப்பின் போது, இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை குறிப்பிட்டேன். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் நேர்மறையான வளர்ச்சிப்பாதை நீடிக்கும் என்று நம்புகிறேன் ,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இருநாடுகளுக்கு இடையேயான சுமூகமான உறவை நீட்டிக்கும் விதமாக, பேச்சுவார்த்தைக்கு வருமாறும் சீனாவுக்கு வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
-
துரோகி என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை: கண்ணீர் விட்டு கதறிய மல்லை சத்யா
-
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுபான்ஷூ சுக்லா குழு; நாளை மதியம் பூமிக்கு வந்தடைவர்!
-
சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு
-
விடுதியில் இருந்து தப்பிக்க முயற்சி: தெலுங்கானாவில் குருகுல மாணவி மரணம்