விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுபான்ஷூ சுக்லா குழு; நாளை மதியம் பூமிக்கு வந்தடைவர்!

புதுடில்லி: விண்வெளி மையத்திலிருந்து மாலை 4.35 மணிக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழுவினர் புறப்பட்டனர். நாளை மதியம் 3 மணிக்கு பூமிக்கு வந்தடைவார்கள்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த ஜூன் 25ம் தேதி விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். இவர்கள் அங்கு பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்தனர்.
இந்திய விண்வெளி வீரர் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு விவசாயியாக மாறினார். அங்கு அவர், வெந்தயம், பச்சை பயிறு வளர்த்தார். இவர்கள், அனைத்து ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்தனர்.
இந்நிலையில் இன்று ( ஜூலை 14) பூமிக்கு திரும்புகின்றனர். இதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் சென்றனர். அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர்.
இந்திய நேரப்படி, மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டது. மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கியது. டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பிறகு, நாளை மதியம் 3 மணிக்கு பூமி வந்தடையும்.
வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில், விண்கலத்தை பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விண்வெளி வீரர் சுக்லாவை வரவேற்க அவரது பெற்றோர் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


மேலும்
-
ஒரு தலைக்காதல் சரிப்பட்டு வராது; பீஹார் தேர்தலில் இண்டி கூட்டணியை நிராகரித்தார் ஓவைசி
-
பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு; உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் நயினார் நாகேந்திரன்
-
நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம்: கர்நாடகாவில் திறந்து வைத்தார் நிதின் கட்கரி
-
துஷ்யந்த் ஸ்ரீதருக்கு எதிராக அவதூறு கருத்து வெளியிட ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!
-
கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை