அரசு பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைப்பதா? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்

சென்னை: ''புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான தொடக்கப்பள்ளி மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது.
@twitter@https://x.com/annamalai_k/status/1944660205113073669twitterஇன்னும் ரசிகர் மன்ற மனப்பான்மையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக கல்வித்துறைக்குச் செய்தது, முதல்வருடன் இணைந்து, விளம்பர நாடகங்களில் நடித்தது மட்டும் தான். பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்தது சட்டப்படி குற்றம் என்பதாவது தெரியுமா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.












மேலும்
-
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!
-
கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி