10 இடங்களில் வெயில் சதம்

சென்னை: தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.

மதுரை விமான நிலையப் பகுதியில், அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

சென்னை, கடலுார், ஈரோடு, கரூர், காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement