ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை நெய்வேலியில் பழனிசாமி 'காட்டம்'

1

கடலுார்: முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலையில்லை என, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் கடலுார் மாவட்டம், நெய்வேலியில் பிரசாரத்திற்கு வருகை வந்தார். இவருக்கு ஆர்ச்கேட் அருகில் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் தி.மு.க., வின் வாரிசு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, கொரோனா பாதிப்பு ஆகியவை சிறப்பாக கையாளப்பட்டன. கொரோனா தொற்றின் போது, மக்களுக்கு வேலை இல்லாத நிலையிலும், அ.தி.மு.க., மக்களுக்கு எந்த குறையும் இன்றி ஆட்சி செய்தது.

ஆனால் தற்போது புயல், வறட்சி, வெள்ளம் எதுவும் இல்லாத நிலையிலும் பொம்மை முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கவனிக்கும் அவருக்கு மக்களை பற்றி சிறிதும் அக்கறை கிடையாது.

தி.மு.க., ஆட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை சம்பவம், கஞ்சா விற்பனை நடக்கிறது. என்.எல்.சி., நிறுவனம் சுரங்க விரிவாக்கபணிக்காக என்.எல்.சி நிலங்களை கையகப்படுத்தும் போது, அதற்கான உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நெய்வேலியை சுற்றியுள்ள பெண்கள் முந்திரிக்கொட்டை உடைத்து வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் சிறிய வகை இயந்திரம் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement