விடுதியில் இருந்து தப்பிக்க முயற்சி: தெலுங்கானாவில் குருகுல மாணவி மரணம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் குருகுலத்திலிருந்து தப்பிக்க முயன்று, கட்டிடத்திலிருந்து குதித்த 5 வகுப்பு மாணவி மரணம் அடைந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் குருகுலம் உள்ளது. இங்கு இன்று ஒரு மாணவி, தப்பிக்க முயன்று விடுதி கட்டிடத்திலிருந்து குதித்த 5 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

இந்த துயர சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

அந்த மாணவி, மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நேற்று அந்த மாணவியின் விருப்பத்திற்கு மாறாக அவரது பெற்றோர்களால் விடுதியில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், மாணவி கடந்த ஜூன் 21 ஆம் தேதி அன்று பள்ளியில் சேர்க்கப்பட்டார், சேர்ந்ததில் இருந்து 13 நாட்கள் நலமாக இருந்தாள். உடல் நிலை சரியில்லாத நிலையில் மாணவிகள் சிலர் ஊருக்கு அனுப்பப்பட்டனர். அவர்களில் இந்த மாணவியியும் ஓருவர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மாணவியின் பெற்றோர் அவளை மீண்டும் குருகுலத்திற்கு அழைத்து வந்ததாக, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது.

Advertisement