செல்சி அணி சாம்பியன்: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

ஈஸ்ட் ரூதர்போர்டு: கிளப் உலக கோப்பை கால்பந்து தொடரில் செல்சி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 3-0 என, பி.எஸ்.ஜி., அணியை வென்றது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்ற 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடந்தது. ஈஸ்ட் ரூதர்போர்டில் நடந்த பைனலில் இங்கிலாந்தின் செல்சி, பிரான்சின் பாரிஸ்-செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய செல்சி அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சி அணி சார்பில் பால்மர் 2 (22, 30வது நிமிடம்), ஜோவோ பெட்ரோ (43வது) ஒரு கோல் அடித்தனர்.
செல்சி அணி 2வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன் 2021ல் கோப்பை வென்றிருந்தது. அதிக முறை கிளப் உலக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கான பட்டியலில் 3வது இடத்தை ஜெர்மனியின் பேயர்ன் முனிக் (2013, 2020), பிரேசிலின் கோரிந்தியன்ஸ் (2000, 2012) அணிகளுடன் பகிர்ந்து கொண்டது செல்சி. முதலிரண்டு இடங்களில் ரியல் மாட்ரிட் (5 முறை, 2014, 2016-18, 2022), பார்சிலோனா (3 முறை, 2009, 2011, 2015) அணிகள் உள்ளன.
காலி இருக்கைகள்
பைனலுக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்ட போதும், மைதானத்தில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. போட்டிக்கு முன், பிரிட்டன் பாடகர் ராபி வில்லியம்சின் இசைக்கச்சேரி காரணமாக போட்டி 8 நிமிடம் தாதமாக துவங்கியது.
இத்தொடரில் நிறைய போட்டிகளில் இருக்கைகள் காலியாக இருந்தன. இதற்கு வெப்பநிலை முக்கிய காரணம். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியற்சிற்கு மேல் இருந்தது. இதனால் வீரர்கள் மட்டுமின்றி போட்டியை காண வந்த ரசிகர்களும் பாதிக்கப்பட்டனர்.
மேலும்
-
'கட்' அடிக்கும் எம்.பி.,க்களுக்கு 'செக்'
-
அரசு தகவல்களை ஊடகங்களுக்கு பரிமாற நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனம்
-
14 வயது முதல் 'பயங்கரம்' தான் 59 வயதிலும் பழக்கத்தை விட்டபாடில்லை
-
போதைப்பொருள் வழக்கில் கர்நாடக காங்., தலைவர் கைது
-
இணைய வேகத்தில் உலக சாதனை நிகழ்த்திய ஜப்பான் விஞ்ஞானிகள்
-
அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு; இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்