இணைய வேகத்தில் உலக சாதனை நிகழ்த்திய ஜப்பான் விஞ்ஞானிகள்

4


டோக்கியோ: இணைய வேகத்தில், ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்.

பெரும்பாலும் இணைய வேகம் என்பது, ஒரு வினாடியில் எவ்வளவு மெகாபைட்ஸ் தகவல் அனுப்பப்படுகிறது என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது, எம்.பி.பி.எஸ்., என்று அழைக்கப்படுகிறது.


அமெரிக்காவில் இணைய வேகம், வினாடிக்கு 300 மெகாபைட் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் இது 64 மெகாபைட்டாக உள்ளது.



இந்நிலையில், கிழக்காசிய நாடான ஜப்பானின் தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள், இணைய வேகத்தில் புதிய சாதனையை நிகழ்த்திஉள்ளனர்.

பதிவிறக்கம்



அதாவது, உலகின் அதிக இணைய வேகமான 1.02 பெட்டாபிட் சோதனையை செய்துள்ளனர். ஒரு பெட்டாபிட் என்பது, 10 லட்சம் ஜிகா பைட்களாகும். அதாவது, 102 கோடி மெகாபைட்கள்.



சுலபமாக சொல்ல வேண்டுமானால், இந்த வேகத்தை வைத்து, 'நெட்பிளிக்ஸ்' தளத்தில் உள்ள அனைத்தையும் ஒரே வினாடியில் பதிவிறக்கம் செய்து விடலாம்.


இதைத் தவிர, புதிய முயற்சியையும், ஜப்பான் விஞ்ஞானிகள் நிகழ்த்தி காட்டியுள்ளனர்.


இணைய சேவைகள், 'பைபர் ஆப்டிக் கேபிள்' எனப்படும் கண்ணாடி இழை கேபிள் வழியாக வழங்கப்படுகிறது. இந்த கேபிள்களில், ஒரே ஒரு கோர் எனப்படும் முக்கிய கடத்தி இருக்கும். தற்போதைய சோதனைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள், 19 கோர்களை பயன்படுத்தியுள்ளனர்.

தகவல் பரிமாற்றம்



ஆனால், கேபிளின் மொத்த தடிமம், 0.125 மி.மீ., அளவுக்கே இருந்தது.

இதன் வாயிலாக, அதிக துாரத்துக்கு தகவல்களை அனுப்ப முடியும் என்ற சாதனையையும் படைத்துள்ளனர். அதாவது, 1,808 கி.மீ., துாரத்துக்கு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

Advertisement