இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

மதுரை: மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் 3 மாதம் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, டெலிகாலிங் பயிற்சி காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை அளிக்கப்படுகிறது.

பயிற்சிக்கு தேவையான சீருடை, உபகரணங்கள் இலவசம். பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பயிற்சிக்கு பின் வேலைவாய்ப்பு, ஊக்கத்தொகை வழங்கப்படும். சுயதொழில் செய்வோருக்கு முன்னுரிமை உண்டு.

பயிற்சியின் போது ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, கம்ப்யூட்டர் சார்ந்த பிற பயிற்சிகள் அளிக்கப்படும். முன்பதிவுக்கு:89030 03090.

Advertisement