நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது.
நீட் அல்லாத படிப்புகளுக்கு வரைவு தரவரிசை பட்டியல் வெளியிட்ட சென்டாக், அடுத்து நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. மாணவ மாணவிகள போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்தனர்.
இறுதி நாளான நேற்று ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். நேற்று வரை 5,900 பேர் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர். வருவாய் துறை சான்றிதழ் பெற காலதாமதம் ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நீட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை 16ம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நீட்டித்துள்ளது.
எனவே எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்), பி.வி.எஸ்சி.,(கால்நடை மருத்துவம்) படிக்க விரும்பும் மாணவர்கள் சென்டாக்கின் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பினை பொருத்தவரை அரசு ஒதுக்கீடு இடங்கள், கிறிஸ்துவ, தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் இடங்கள், அகில இந்திய நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., சீட்டுகள் உள்ளன. ஆயுர்வேத படிப்பினை பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கால்நடை மருத்துவ படிப்பினை பொருத்தவரை சுயநிதி, என்.ஆர்.ஐ., சீட்டுகள் உள்ளன.
மருத்துவ படிப்பில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள், பிற மாநில மாணவர்கள், ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பிக்கலாம். கிறிஸ்துவ, தெலுங்கு பேசும் சிறுபான்மையினர் இடங்களுக்கு புதுச்சேரி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினருக்கு 500 ரூபாய் கட்டணம், இதர பிரிவினர் 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாக இடங்களுக்கு எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளிகள் 1000 ரூபாயும், பிற மாநில மாணவர்கள் 2 ஆயிரம் ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக இடங்களுக்கு சேர்ந்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி பிரிவினர் 1000 ரூபாய், இதர பிரிவினர் 2 ஆயிரம் ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
என்.ஆர்.ஐ.. மற்றும் என்.ஆர்.ஐ.,ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
-
சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது: சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு
-
இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா; மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு
-
பினராயி விஜயன் பெயரில் மும்பை பங்குச்சந்தைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
-
645 பணியிடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு அறிவிப்பு
-
முத்துக்குமார சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா