100 நாள் வேலை கேட்டு பெண்களுடன் சிவா எம்.எல்.ஏ., தர்ணா போராட்டம்; வில்லியனுாரில் திடீர் பரபரப்பு

வில்லியனுார் : வில்லியனுார் தொகுதியில் 100 நாள் வேலை கேட்டு பி.டி.ஒ அலுவலகத்தில் பெண்களுடன் சிவா எம்.எல்.ஏ., போராட்டத்தில் ஈடுபட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வில்லியனுார் தொகுதியில் 100 நாள் வேலை கொடுக்காததால் 100க்கும் மேற்பட்ட பெண்கள் வில்லியானுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து சென்ற சிவா எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் பெண்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட அதிகாரி தயானந் டெண்டுல்கர் மற்றும் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி ஆகியோர் சிவா எம்.எல்.ஏ., விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வில்லியனுார் பி.டி.ஓ., அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்திலும் எனது தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. தொகுதியில் 100 நாள் வேலை முழுமையாக கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் 100 நாட்களுக்கு இதுவரை 8 நாட்கள்மட்டுமே வேலை வழங்கியுள்ளனர்.

துறை மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட உழவுப் பொருட்கள் அனைத்தும் கொடுத்தவர்களிடம் உள்ளதா அல்லது வெளியில் விற்கப்பட்டுள்ளதா என்தை ஆய்வு செய்யவேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை முன்வைத்தார்.அதிகாரிகள் தரப்பில். நாளை முதல் 100 நாள் வேலை கொடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இரண்டு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement