இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வாங்குகிறது ருமேனியா

புக்கரெஸ்ட்; இஸ்ரேலின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக கருதப்படும் 'அயர்ன் டோம்' அமைப்பைப் பெறும் முதல் ஐரோப்பிய நாடு என்ற சிறப்பை ருமேனியா பெறுகிறது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலிடம் உள்ள அயர்ன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு உலகப் புகழ்பெற்றது. ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் உருவாக்கியது இந்த அமைப்பு.
இது உலகின் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகள், போர் விமானங்கள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
குறுகிய மற்றும் மிகக் குறுகிய வான் பாதுகாப்பு அம்சங்களுடன், அயர்ன் டோம் அமைப்பை வாங்க, ஐரோப்பிய நாடான ருமேனிய திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் வரும் நவம்பருக்குள் கையெழுத்தாகும் என, ருமேனியாவின் ராணுவ அமைச்சர் அயோனுஸ் மோஸ்டீனு தெரிவித்துஉள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்றதாக இருப்பினும், அயர்ன் டோம் அமைப்பை ஒரு சில நாடுகள் மட்டுமே வாங்கியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், அதிக வான் பரப்பை இந்த அமைப்பு முழுமையாக பாதுகாக்க முடியாது.
வெறும், 22,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவே உள்ளதால், இது இஸ்ரேலின் முக்கிய கேடயமாக உள்ளது. அமெரிக்கா, கனடா, பின்லாந்து என, ஒரு சில நாடுகள் மட்டுமே, அயர்ன் டோம் அமைப்பின் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வாங்கியுள்ளன.
இந்தியா, அஜர்பைஜான் உட்பட பல நாடுகளும், இந்த அமைப்பை வாங்க ஆர்வம் தெரிவித்தன. ஆனால் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
மேலும்
-
மின்விளக்கு கம்பம் மாயம்: மின்வாரியம் பாராமுகம்
-
நெய்வேலியில் விவசாயிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை
-
சீன அதிபருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
-
பொது மேடையில் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: பழனிசாமி பேச்சு
-
கர்நாடகாவில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்; காங். அரசு அறிவிப்பு
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு