கர்நாடகாவில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்; காங். அரசு அறிவிப்பு

பெங்களூரு; பெண்களுக்கு இருப்பது போல், இனி அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை செயல்படுத்த கர்நாடகா காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு சக்தி என்று அம்மாநில அரசு பெயர் சூட்டி உள்ளது.
மகளிர் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் அரசு தெரிவித்து வருகிறது. இந் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை துணை முதல்வர் டிகே சிவகுமார் வெளியிட்டு உள்ளார். எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசுபள்ளி மாணவர்கள் இந்த சலுகையை பெற தகுதியானவர்கள். அவர்கள், அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று டி.கே. சிவகுமார் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் தற்போதைய நிலவரப்படி 308 அரசு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவர்களுக்கு கன்னடம் மற்றும் ஆங்கில வழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இலவச பஸ் சேவை திட்டம் பள்ளி மாணவிகளுக்கு ஏற்கனவே உள்ள நிலையில், இனி பள்ளி மாணவர்களும் பஸ்சில் இலவசமாக சென்று வரலாம்.

மேலும்
-
சாவிலும் இணை பிரியாத தம்பதி
-
சுபான்ஷூ சுக்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி
-
மும்பை புறப்பட்ட விமானத்தில் ஏர் கண்டிஷனர் வேலை செய்யாததால் ஆத்திரம்: விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணிகளால் பரபரப்பு
-
பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி
-
ஆசிரியர்களை கைது செய்வதா: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
-
லஞ்ச பேரம் ஆடியோ கசிவு: நேபாள அமைச்சர் ராஜினாமா