கால்நடைகளுக்கு இணை உணவாகும் அசோலா

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், அசோலா குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்தது.

வேளாண் நுண்ணுயிரியல் துறை சார்பில், 'அசோலா பேரளவு உற்பத்தி; உயிர் உரம் மற்றும் தீவனம்' என்ற தலைப்பில் நடந்த இப்பயிற்சியில், தொண்டாமுத்தூர் மற்றும் சர்க்கார்சாமக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள், சுயதொழில் முனைவோர்க்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

துவக்க விழாவில் பல்கலை துணை வேந்தர் தமிழ்வேந்தன் தலைமை வகித்துப் பேசுகையில்,“விவசாயிகள் உணவு தன்னிறைவை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படக்கூடாது. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய தன்னிறைவையும் கருத்தில் கொண்டு, அசோலா போன்ற இதர உயிர் உரங்களையும் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.

இயற்கை வள மேலாண்மை முன்னாள் இயக்குநர் குமார் பேசுகையில் ,'' அசோலா தாவரத்தில், அனபீனா அசோலே என்ற பாசி உள்ளது. இந்தப் பாசி அதிக புரதச்சத்து கொண்டது. இதனை உற்பத்தி செய்வது எளிது. உரமாக பயன்படுத்தலாம்.

''ஆடு, மாடு, கோழிகளுக்கு பசுந்தீவனமாகவும், உலர்தீவனமாகவும் வழங்கலாம்,” என்றார்.

நுண்ணுயிரியல் துறை தலைவர் சிவகுமார், இயற்கை வள மேலாண்மை இயக்குநர் பாலசுப்ரமணியம், பயிற்சித் திட்ட ஒருங்கிணைபாளர் ஞானசித்ரா கால்நடை மருத்துவர்கள் பிரபாகர், திருநாவுக்கரசு, சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement