கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாற்றம்

கோவை; கோவை மாநகர போலீசில், புதிய தெற்கு துணை கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள 54 ஐ.பி.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த உதயகுமார், சென்னை மாநகர துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை மாநகரில், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் என்பவர், கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement