நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை: ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் ஆதரவு

18

ஹைதராபாத்: நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று ஆந்திரப் பிரதேச கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் நாரா லோகேஷ் அமைச்சர் கூறி உள்ளார்.




இது குறித்து அவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்து இருந்தார். அதில் நாரா லோகேஷ் கூறி இருப்பதாவது: தேசிய கல்விக்கொள்கை மிகவும் சிறப்பு வாய்ந்தது.அதை எங்களின் மாநிலத்தில் செயல்படுத்தும் நடவடிக்கைளை நாங்கள் தொடங்கி விட்டோம். அந்தந்த மாநிலங்கள் அவர்களின் வசதிக்கேற்ப இதை செயல்படுத்துவதை தீர்மானித்துக் கொள்ளலாம்.


தேசிய ஜனநாயக கூட்டணி, தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறது. ஹிந்தி ஒரு தேசியமொழி. ஆங்கிலத்துடன் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஆதரிக்க வேண்டும். நம் குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளை நாம் எதற்காக ஹிந்திக்கு எதிரானதாக சித்தரிக்கிறோம்.


ஜப்பான் மற்றும் ஜெர்மன் போன்ற கூடுதல் மொழிகளைக் கற்றுக் கொள்வது மூலம் மாணவர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை உருவாக்கலாம். இவ்வாறு நாரா லோகேஷ் பேசினார்.

Advertisement