சேலத்தில் ரவுடி வெட்டிக் கொலை; 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

9


சேலம்: சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வந்த ரவுடி மதன்குமார் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிபந்தனை ஜாமினில் , தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி மதன்குமார் கையெழுத்திட வந்தார். அவர் கையெழுத்திட்ட பிறகு, எதிரே உள்ள அசைவ உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மதன்குமாரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தனர்.
அந்த கும்பல் சரமாரியாக வெட்டியதில் ரவுடி மதன்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். பட்டப்பகலில், அதுவும் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே இந்த சம்பவம் நடந்தது. கும்பல் வெட்டுவதை கண்டதும் உணவகத்தில் இருந்தவர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர்.


கொலையுண்ட மதன்குமார் மீது துாத்துக்குடியில் இரட்டை கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் தான் அவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கையெழுத்திட வந்துள்ளதாக போலீஸ் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துாத்துக்குடியில் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மதன்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement